×

தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்; காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிற்கு தினம் தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வருவதால் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகத்தோடு தவித்து வருகின்றனர். கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பை பெற வேண்டும். கர்நாடக காங்கிரஸ் முதல்வரை, நேரில் சந்தித்து காவிரி பிரச்னைக்கு தமிழக முதலமைச்சர் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது: டிடிவி தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,DTV ,Dinakaran ,Chennai ,Nadu ,Amadhatham General ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...